ஒபாமாவின் 2008 சாதனையை முறியடித்த பைடனின் வரலாற்று சாதனை
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஏற்கனவே அமெரிக்க வரலாற்றில் கடந்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளை விட மேன்மையான சாதனையைப் படைத்துள்ளார்.
2008ல் ஒபாமா
2008 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவுக்கு கிடைத்த 69.5 மில்லியன் வாக்குகளின் சாதனையை பைடன் முறியடித்துள்ளார்.
ஜோ பைடன் ஏற்கனவே 72 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை இப்போதே பெற்றுள்ளார், மேலும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப் போகிறது. இது வரவிருக்கும் 5 மாநிலங்களின் முடிவுகளுக்கு ஏற்ப எகிறிவிடும்.
டிரம்பின் புகழ் அதிகரித்துள்ளது!
இதற்கிடையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் ஏற்கனவே 2016 ல் பதிவான 67 மில்லியன் வாக்குகளைத் தாண்டி 68 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பதிவு செய்துள்ளார். இந்த எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும்.
அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, ஒட்டுமொத்த முடிவில் ஜோ பிடனுக்கு குறைந்தபட்சம் 52% மக்கள் வாக்குகள் கிடைக்கும்.
வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் வாக்களித்த தேர்தல் இதுவாகும்
இந்த இரு வேட்பாளர்களின் வாக்குத் தளம் அதிகரிப்பதற்கான ஒரு முக்கிய காரணம், இந்த தேர்தல் வரலாற்றில் அதிக மக்களால் வாக்களிக்கப்பட்ட தேர்தலாக மாறியுள்ளது. முன்னதாக இந்த எண்ணிக்கை 1908 இல் 65% ஆக இருந்தது. ஆனால் 2020 வாக்கில், தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 160 மில்லியனாக இருந்தது, அவர்களில் 67% பேர் வாக்களித்துள்ளதாக நம்பப்படுகிறது.