வீதியை திருத்தும் றோலருக்குள் அகப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.

வீதி றோலருக்குள் அகப்பட்டு ஒருவர் பலி
வீதியை திருத்தும் றோலருக்குள் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (5) பிற்பகல் கொடிகாமம் வீதி முள்ளிப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தற்போது நெல்லியடி கொடிகாமம் வீதி திருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. அதில் கொடிகாமம் வீதியில் உள்ள முள்ளிப் பகுதியில் வீதி திருத்தும் றோலருக்குள் தவறி விழுந்தவர் அதனுள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பலாங்கொடயைச் சேர்ந்த பிறேமரத்தின (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.