தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 6 வீடுகள் கையளிப்பு.
பொத்துவிலில் ஆறு வீடுகள் கையளிப்பு!
‘கிராமத்திற்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேசத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட 6 வீடுகள் உரிய பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
அவ்வீடுகளை பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் சுகாதாரமுறைப்படி சென்று பயனாளிகளிடம் வழங்கிவைத்தனர்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு என்ற கொள்கைக்கு அமைய உற்பத்தித்திறன் மிக்க ஒரு பிரஜை மற்றும் மகிழ்ச்சியுடன் வாழும் ஒரு குடும்பத்தை உருவாக்கும் நோக்கில் சௌகரியமான ஒரு வீட்டினை நிர்மாணித்து கொடுப்பதன் மூலம் பொருளாதார இலக்கினை அடைந்து கொள்வதற்காக அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு நிலையான வெற்றியை பெற்றுக் கொடுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த நோக்கத்தை அடைந்து கொள்ளும் பொருட்டு பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டிடப் பொருட்கள் நிறுவன மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரேணுக பெரேராவின் நெறிப்படுத்தலில் நாடு பூராகவும் ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.