தனியார் வைத்தியசாலையில் ஒன்றில் இதுவரை 20 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று.

லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் இதுவரை 20 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று.
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 20 பேர் சிறுவர்கள் எனவும் 12 பேர் கர்ப்பிணிகள் என மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார்.
மேலும் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
எனினும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வர பயப்படத் தேவையில்லை என்று அவர் கூறினார்.
வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் நடந்து வருவதாக இயக்குனர் மேலும் தெரிவித்தார்.