270 Electoral College வாக்குகளைப் பெற்றுவிட்டால் மட்டும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமா?
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: 270 Electoral College வாக்குகளைப் பெற்றுவிட்டால் மட்டும் ஜனாதிபதியாக முடியுமா?
தற்போது வெளியாகி வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் குறித்து உலகின் பெரும்பாலானவர்களது கவனம் திரும்பியுள்ளது.
உலக வல்லரசாக அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்காவின் தேர்தல் முறை ஏனைய நாடுகளின் தேர்தல் முறையை விட வேறுபட்டது.
அதன்படி, ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வெளியாவதன் மூலம் மட்டுமே அது ஜனாதிபதியின் அடையாளத்தை தீர்மானிக்காது.
Electoral College தேர்தல் என்றால் என்ன?
இந்த தேர்தலின் மூலம்தான் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிக்கும் போது காங்கிரசுக்குச் செல்ல வேண்டிய உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள மாநிலங்களுக்கு Electoral College வாக்குகள் உள்ளன. அந்த எண்ணிக்கை அந்தந்த மாநிலத்தில் வசிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது.
அதன்படி, அதிக எண்ணிக்கையிலான Electoral College வாக்குகளைக் கொண்ட கலிபோர்னியா மாநிலத்தில் 55 Electoral College வாக்குகள் உள்ளன.
இந்த Electoral College வாக்குகள் எனப்படுவது காங்கிரஸ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையாகும். அதன்படி, அமெரிக்கா முழுவதும் Electoral College வாக்குகள் 538 உள்ளன.
எனவே 270 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளை வென்ற வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளராக கருதப்படுகிறார்.
இருப்பினும், அந்த வெற்றியின் அடிப்படையில், அவர் அல்லது அவள் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் என்று முடிவு செய்ய முடியாது.
டிசம்பர் மாதம் Electoral College பிரதிநிதிகள் மத்தியில் நடைபெறும் வாக்களிப்பின் பின்னரே ஜனாதிபதி யார் என்பது இறுதி தேர்வாக அமையும்.
அதன்படி, அதனூடாகவும் வெற்றி பெறும் வேட்பாளரே ஜனவரி மாதம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார்.