கொரணா சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலை மாற்றம்.
கொவிட் – 19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலை.
வடக்கு மாகாணத்தில் நான்காவது கொவிட் – 19 சிகிச்சை நிலையமாக
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு 30 நோயாளர் படுக்கைகளைக் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரிவு நேற்று(05) முதல் இயங்க ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.