மீதமுள்ள 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் பைடன் முன்னணியில்!
குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் கோட்டையாக இருந்த ஐந்து முக்கியமான மாநிலங்களில் நான்கில் இப்போதைய நிலவரப்படி ஜோ பைடனும் ஜனநாயகக் கட்சியினரும் முன்னணியில் உள்ளனர்.
அதன்படி, ஜார்ஜியா, பென்சில்வேனியா, நெவாடா மற்றும் அரிசோனா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பைடன் இப்போது டிரம்பை முந்தியுள்ளார்.
Electoral College எனப்படும் தேர்தல் கல்லூரியின் குறைந்தபட்ச வாக்குகளில் 270ல் 264 வாக்குகளைப் பெற்ற பைடென் இரண்டு வழிகளில் வெற்றியைப் பெறக் கூடியதாக இருக்கிறது.
1. அரிசோனா, வட கரோலினா, நெவாடா, ஜார்ஜியா ஆகிய 4 மாநிலங்களில் 2 மாநிலங்களில் வெற்றியை பெறுவது
2. பென்சில்வேனியா மாநிலத்தின் வெற்றி
தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, பைடென் விரைவில் இந்த இரண்டு முறைகளிலும் வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.