கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் சிலம்பம் என்னும் கம்புசுற்றும் கலை அறிமுகம்.
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் வீரமிகு கலையாகவும் உடல் ஆரோக்கிய வர்மப்புள்ளிகளை தூண்டும் மருத்துவ கலையாகவும் சிறப்பிக்கப்படும் சிலம்பம் என்னும் கம்புசுற்றும் கலையாகும்.
நீண்டகால இடைவெளியின் பின்னர் மாணவர்களுக்காக “கிளிநொச்சி”மாவட்ட பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வில் அறிமுக நிகழ்வாக புத்துயிர் வழங்கப்பட்டது.
அதில் பங்குபற்றி அடிப்படை பயிற்சிகளைப் பெற்ற 25 மாணவர்களுக்குமான சான்றிதழ் வழங்கப்பட்டது.
2020 ல் மேற்படி கலையானது தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு அவர்களது சுய ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்காகவும் சர்வதேச “வில்வித்தை” விளையாட்டுக்கான உடற்பயிற்சி மேம்பாட்டு நோக்காகவும் பயிற்றுவிக்கப்படவுள்ளது.