2020 O/L பரீட்சைக்கான திகதி மாற்றம் : 2021 ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.