பென்சில்வேனியாவின் வெற்றி மட்டும் ஜோ பைடனுக்கு போதுமானது
பென்சில்வேனியா மாநிலத்தின் 98 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு விட்டதாக பென்சில்வேனியா தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜோ பைடென் ஜனாதிபதி டிரம்பை விட 5,587 வாக்குகளைப் பெற்று முன்னணியில் உள்ளார்.
பென்சில்வேனியாவில் வெற்றி பெற்றால், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற தேவையான 270 கல்லூரி வாக்குகள் அவருக்கு கிடைக்கும்.
நியூயார்க்கில் உள்ள பிபிசி நிருபர் நிக் பிரையன்ட் கருத்துப்படி, இது ஜனாதிபதித் தேர்தலில் ஒரு முக்கியமான தருணம்.
ஜார்ஜியா, நெவாடா மற்றும் அரிசோனாவிலும் ஜோ பைடென் முன்னிலையில் உள்ளார், ஆனால் பென்சில்வேனியாவின் வெற்றி மட்டுமே ஜனாதிபதி பதவியை பெறுவதற்கு போதுமானது என பிபிசி தெரிவித்துள்ளது.
Joe Biden has taken the lead in Pennsylvania – the potentially decisive moment of this election. 5,587 ahead.
Biden leads in Georgia
Biden leads in Nevada
Biden leads in Arizona.
Pennsylvania alone wins him the presidency.— Nick Bryant (@NickBryantNY) November 6, 2020