மன்னாரில் பசுமை புரட்சி மரநடுகை திட்டம்.

பசுமை புரட்சி-மரநடுகை திட்டம்
மன்னார் மாவட்டத்தில் குணரத்தினம் பவுண்டேசனின் அனுசரணையுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலனாதனின் வழிகாட்டலில் மரநடுகை திட்டம் ஆரம்பிக்கபட்டுள்ளது.

சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 3000 கன்றுகளை நாட்டுவதுடன் “மன்னார் மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
இத் திட்டம் வைபக ரீதியாக 06.11.2020(வெள்ளிக்கிழமை) அன்று மன்னார் நானாட்டான் பிரதேச செயலக வளகாத்தை சூழ நிழல் தரும் பயன்தரும் மரங்கள் நாட்டிவைக்கபட்டது.

இவ் நிகழ்வை பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் ஆரம்பித்து வைக்க அதனை தொடர்ந்து நானாட்டான் பிரதேச சபை தவிசாளர்,பிரதேச செயலாளர்,பிரதேச சபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் மரக்கன்றுகளை நாட்டிவைத்தனர்.
