கிழக்கில் சதத்தை எட்டிய கொரோனா.
கிழக்கில் சதத்தை எட்டிய கொரோனா.
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சதத்தை (100) எட்டியுள்ளது.
இறுதியாக மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப் பிரிவில் மேலும் 4 பேருக்கும், மட்டக்களப்பில் 2 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
இதுவரை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 13 பேரும், கல்முனைபி பிராந்தியத்தில் 20 பேரும், அம்பாறைப் பகுதியில் 7 பேரும் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.
கல்முனையில்
தடை நீங்கவில்லை
இதேவேளை, கல்முனைப் பிராந்தியத்தில் வணக்கஸ்தலங்கள் மீதான தடை இன்னும் நீக்கப்படவில்லை என்று கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் கு.சுகுணன் தெரிவிக்கிறார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“என்னாலோ அல்லது எனக்குக் கீழான எந்தவொரு அதிகாரிகளினாலோ பள்ளிவாசல்களோ, கோயில்களோ, கிறிஸ்தவ தேவாலயங்களோ, விகாரைகளோ மீண்டும் பொதுமக்களுக்காகத் திறப்பது சம்பந்தப்பட்ட எந்தவிதமான புதிய அறிவுறுத்தல்களும் இதுவரை கொடுக்கப்படவில்லை. விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” – என்றார்.