அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி என்ற பெருமையைப் பெறுகிறார் கமலா ஹாரீஸ்.

அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி என்ற பெருமையைப் பெறுகிறார் கமலா ஹாரீஸ்.
இந்தியாவை(தமிழகம்) பூர்வீகமாகக் கொண்ட ஆபிரிக்க அமெரிக்கப் பெண்ணாவார்.
இவர் 2017ஆம் ஆண்டில் கலிபோர்னியா மாநிலத்தின் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அப்பதவிக்கு தெரிவான முதலாவது கறுப்பின பெண் என்ற பெருமையைத்தனதாக்கியிருந்தார்.
அமெரிக்க ஜனநாயக்கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான போட்டியில் 2019ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தனது பெயரையும் பதிவுசெய்து ஆரம்பத்தில் சிறப்பாகச் செயற்பட்ட கமலா ஹரிஸ் பின்னர் குறைவான ஆதரவுகாரணமாகவும் விமர்ச்சனங்கள் காரணமாகவும் அதிலிருந்து விலகிருந்தார்.
55 வயதுடைய கமலா ஹரிஸின் தந்தை ஜமேக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவர் என்பதுடன் அவரது தாயார் இந்தியாவைச் சேர்ந்த தமிழர். .1964ம் ஆண்டு ஒக்டோபர் 20ம் திகதி பிறந்த கமலா ஹரிஸின் முழுப்பெயர் கமலா தேவி ஹரிஸ் என்பதாகும்.
மாயா என்ற தங்கையும் கமலாவிற்கு உள்ளார்.
தந்தையின் பெப்டிஸ்ற் கிறிஸ்தவ மதப்பின்புலத்திலும் தாயின் இந்துமதப்பின்புலத்திலும் தனது இளமைக்காலத்தில் வளர்க்கப்பட்ட கமலா ஹரிஸ் தந்தை டொனால்ட் ஹரிஸ் அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஸ்டான்பேர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.