வவுனியா கற்பகபுரம் கிராமத்திற்கான 3கிலோமீட்டர் காபட் வீதி ஆரம்ப நிகழ்வு.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் விஷேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் வேண்டுகோளின் பேரில் வவுனியா மாவட்டத்தில் கற்பகபுரம் பகுதிக்கான 3கிலோமீட்டர் பிரதான காபட் வீதி 79.9 மில்லியன் செலவில் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு
உத்தியோகப்பூர்வமாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஸா அவர்களும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் ஆகியோர் இணைந்து நேற்று (07.11.2020) ஆரம்பித்துவைத்தனர்.