டெங்கு மற்றும் கொரோனா இரண்டும் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் நோயாளி.
நாட்டில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு நோய் உள்ள முதலாவது நபர் அடையாளம்!
நாட்டில் டெங்கு மற்றும் கொரோனா இரண்டும் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் நோயாளி நீர்கொழும்பு மருத்துவமனையில் இருந்து பதிவாகியுள்ளது.
இவர் 29 வயதான ஒருவர் எனவும் , அவர் மீன் சந்தை ஒன்றுடன், கொரோனா உடன் தொடர்பு கொண்டார் என்றும் நீர்கொழும்பு டெங்கு நோயியல் மையத்தின் தலைவர் வைத்தியர்.லக்குமார் பெர்னாண்டோ கூறினார்.
“நோயாளி அதிக காய்ச்சலுடன் வந்தார், நாங்கள் அவரை antigen பரிசோதனையின் மூலமாகவும், PCR பரிசோதனையின் மூலமாகவும் பரீட்சித்தோம்.
மூன்றாம் நாளில் டெங்கு சோதனை சாதகமாக வந்தாலும், PCR சோதனை முடிவுகள் 5 ஆம் நாள் வந்தது ”என்று வைத்தியர் பெர்னாண்டோ கூறினார்.
நோயாளி டெங்கு தொடர்பாக மருத்துவ ரீதியாக நிலையானவராக இருப்பதால், அவர் தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்திற்கு IDH இற்கு மாற்றப்பட்டுள்ளார்.