நிதி மோசடியில் ஈடுபட்டவர் இன்னும் கைதுசெய்யப்படாமை கடும் கண்டனத்திகுறிய விடயம்.
நிதி மோசடியில் ஈடுபட்டவர் இன்னும் கைதுசெய்யப்படாமை வேதனை தரும் விடயம்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்றுள்ள நிதிமோசடி தொடர்பாக சம்பந்தப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படாமை வேதனையான விடயம் என்பதற்கு அப்பால் பல சந்தேகங்களையும் உருவாக்குகின்றது.
நிதி மோசடியில் ஈடுபட்டவர் யார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்வி வலத்தில் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக தன்னைக் காட்டிக்கொண்டு, உயர் அதிகாரிகளை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டவரை சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு, தற்போதுள்ள அபாயகரமான சூழ்நிலையில் பலரை கொழும்பிற்கு அழைத்து விசாரிப்பதன் மர்மம் என்ன? குற்றவாளி என கண்டறியப்பட்டவரை கைதுசெய்து அவரூடாக அனைத்தையும் அறிவதே பிரதானமான விடயம். சம்பந்தமில்லாதவர்களை அழைத்து விசாரணை நடாத்தினால் கிடைக்கப்போவது எதுவுமில்லை. மாறாக விசாரணை என்ற போர்வையில் இழுத்தடிப்புகள் மட்டுமே மிஞ்சும்.
ஆகையால் குற்றவாளி என இனங்காணப்பட்டவரை உடன் கைதுசெய்து உரிய இடத்தில் வைத்தே விசாரணை செய்யுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது.