பைடன் கோவிட் பரப்புதலை கட்டுபடுத்தும் பணியோடு அதிபர் வேலையைத் தொடங்குகிறார்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான ஜோ பைடன்,நாட்டின் பேரழிவு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஒரு பணிக்குழுவை தனது பதவியேற்க முன்னரே அமைக்க முடிவு செய்துள்ளார்.
அமெரிக்க ஊடக அறிக்கையின்படி, இந்த பதவிகளுக்காக 12 நிபுணர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் நாளை முதல் முறையாக ஒன்று கூட உள்ளனர்.
பணிக்குழுவின் மூன்று தலைவர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்களில் முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் விவேக் மூர்த்தி, உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் டேவிட் கெஸ்லர் மற்றும் யேல் பல்கலைக்கழக டாக்டர் மார்செலா நூன்ஸ் ஸ்மித் ஆகியோர் அடங்குகிறார்கள்.
கோவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஜோ பைடனின் நீண்டகால திட்டத்திற்கு சான்றாக பணிக்குழுவின் பெயரை அமெரிக்கர்கள் பாராட்டியுள்ளனர்.
ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜனவரி 20 முதல் பணிக்குழுவுக்கு சட்ட அதிகாரங்கள் வழங்கப்படும்.