Covid 19 – மேலும் ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
78 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்துள்ளார்.
பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் உயிரிழந்தமைக்கான காரணமாக கொவிட் 19 தொற்றுடன் மாரடைப்பு ஏற்பட்டமையே என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.