புதிய விமானப்படை தளபதி பிரதமரை இன்று சந்தித்தார்.
புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன இன்று (2020.11.09) திங்கட்கிழமை விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார்.
18ஆவது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன உத்தியோகப்பூர்வமாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து தனது சேவை குறித்து கலந்துரையாடினார்.
புதிய விமானப்படை தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாட்டின் பாதுகாப்பு மற்றும் விமானப்படையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து இதன்போது கேட்டறிந்து கொண்டார்.
இவ்வுலகத்திற்கு ஏற்றவகையில் இலங்கை விமானப்படையை முன்னேற்ற பாதையில் நகர்த்துதல் மற்றும் தேசிய பொறுப்புகளை நிறைவேற்றுதல் குறித்து புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன நம்பிக்கை வெளியிட்டார்.
முழு உலகிற்கும் அச்சுறுத்தலாகியுள்ள கொவிட்-19 தொற்று நிலையிலிருந்து இலங்கை மக்களை விடுவிப்பதற்காக இலங்கை விமானப்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் இதன்போது பாராட்டினார்.
18ஆவது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன, முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான மனிதாபிமான நடவடிக்கைக்கு போர் படைகளை இயக்குவதில் அவர் முக்கிய பங்களிப்பு செய்தார்.