கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை (உடலங்களை) அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதியிடம் இது தொடர்பாக எடுத்துரைத்துள்ளார். இதன்போதே ஜனாதிபதி மேற்படி அனுமதியை வழங்கியுள்ளார்.
அதற்கமைய கொரோனாத் தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முதல் கட்டமாக மன்னார் பிரதேசத்தில் இடமொன்றை ஒதுக்கி அடக்கம் செய்வதற்கு ஆராயப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னரே இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.