இலங்கையில் இன்றும் 356 பேருக்குக் கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இன்றும் 356 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலையில் மட்டும் சிக்கிப் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 811 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 285 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றாளர்களில் 5 ஆயிரத்து 369 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8 ஆயிரத்து 880 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 36 பேர் உயிரிழந்துள்ளனர்.