கம்பஹாவில் பெண்ணெருவர் தனது வீட்டில் இறந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி.

கம்பஹா டொரன்கொடவில் வசிக்கும் பெண்ணெருவர் தனது வீட்டில் இறந்துள்ளார் இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 63 வயதான இந்த பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார். என கம்பாஹா சுகாதார பொது சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.
கம்பாஹா மாவட்ட பொது மருத்துவமனையில் பரிசோதனையின் பின்னர் இது தெரியவந்துள்ளது என்று கூறினார். பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அத்துடன் இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.