வாகன விபத்தில் ஒரு வயதுக் குழந்தையொன்று பலி.

பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன், மேலும் நாவல்வர் காயமடைந்துள்ளனர்.
பதுளை மஹியங்கனை வீதியில் நேற்று குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்தே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் ஆறு வயது குழந்தையொன்றும், முச்சக்கர வண்டியின் சாரதியும், அவரது மனைவியும் வேறு ஒர் பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.