கொரனா தொற்றுக்குள்ளான 64 நோயாளர்கள் பாலமுனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேற்றம்.
கொரனா தொற்றுக்குள்ளான 64 நோயாளர்கள் பாலமுனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேற்றம்
கொவிட்-19 கொரனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அம்பாறை மாவட்டம் பாலமுனை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த 64 பேர் சுகமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றுக்குள்ளான கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 64 நோயாளர்கள் இவ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தனர்
இவர்களுக்கான சிகிச்சையளிக்கும் விடயத்தில் கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தலைமையில் தொற்று நோய் பிரிவு வைத்தியர்களினால் சிறந்த பராமரிப்புகளுடன் சிகிச்சை பெற்று குறித்த 64 நோயாளர்களும் நேற்று (09) மாலை அவர்களது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சுகமடைந்த மேலும் 32 பேர் கடந்த வாரம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வெளியானவர்களில் கொழும்பைச் சேர்ந்தவர்கள் – 52 பேர் , யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த – 01 வர் ,வாழைச்சேனையைச் சேர்ந்த -07 பேர் , பொத்துவில்லைச் சேர்ந்த – 03 பேர் மற்றும் சாய்ந்தமருத சேர்ந்த ஒரு வருமாக 64 பேர் ஆகுமென கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது