வேறு மாகாணங்களிலிருந்து வட மாகாணத்துக்கு வருகை தந்தோர் மருத்துவ அதிகாரியிடம் (MOH) பதிவு செய்யவேண்டும்.
நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் வேறு மாகாணங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தோர் தற்போது தங்கியிருக்கும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பதிவு செய்யவேண்டும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இவர்களை வீட்டில் சுயதனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்துவது தொடர்பான முடிவுகளை அவர்கள் புறப்பட்டு வந்த இருந்து வந்த பிரதேசங்களின் நோய் நிலமைகளின் அபாயங்களைப் பொறுத்து சுகாதார மருத்துவ அதிகாரிகள் தீர்மானிப்பர்.
இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உங்களது விவரங்களை அறியத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்