20ம் திருத்தத்தின்படி அமைச்சரவையில் புதிய மாற்றம் : ஜனாதிபதி

எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவை மாற்றம் ஒன்றை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு அமைய தனது செயற்பாடுகளை முன்கொண்டு செல்ல ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
தற்போது அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவி வகிக்கும் 15 பேரின் பதவிகளில் மாற்றம் ஏற்படலாம் எனவும் புதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒருசிலர் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்த எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கும் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது.