தீப்பற்றியேறிந்த ஹாட்வெயார் நிலையம் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்.

வவுனியா செட்டிக்குளத்தில் தீப்பற்றியேறிந்த ஹாட்வெயார் நிலையம் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்
வவுனியா செட்டிக்குளம் நகரப்பகுதியில் அமைந்துள்ள ஹாட்வெயார் நிலையம் தீப்பற்றியேறிந்துள்ளது.
(09.11.2020) காலை இடம்பெற்ற இவ் தீ விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
செட்டிக்குளம் நகரில் அமைந்துள்ள ஹாட்வெயார் பொருட்கள் விற்பனையகம் காலை 7.00 மணியளவில் திடீரேன தீப்பற்றியேறிந்துள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள் தீயினை கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டதுடன் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கும் தகவலை வழங்கியிருந்தனர்.
குறித்த இடத்திற்கு அதிவேகமாக வருகை தந்த நகரசபை தீயணைப்பு பிரிவினர் காலை 8.40மணியளவில் தீயினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்து காரணமாக பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் ஏறிந்து நாசமாசியுள்ளது.
மின்சார ஒழுக்கு காரணமாக இவ் தீவிபத்து சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என செட்டிக்குளம் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதுடன் தடவியல் பொலிஸாரும் வரவளைக்கப்பட்டுள்ளனர்.