கிருஸ்ணபுரத்தில் நாளை கொரோனா தொற்று வைத்தியசாலை திறக்கப்படவுள்ளது.

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் கொரோனா தொற்று
நோய்குரிய புதிய சிகிச்சை நிலையம் 11.11.2020 ஆம் திகதி காலை 11.00 மணிக்கு அங்குரார்பணம் செய்யப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இச் சிகிச்சை நிலையம் 200 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதிகளை உடையது.

இச் சிகிச்சை நிலையமானது மத்திய சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் சிபாரிசுடன் உலக வங்கியின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வடமாகாணத்தில் யாழ்.மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை, கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மாங்குளம் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் கொரோனா சிகிச்சை நிலையங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

எதிர் காலத்தில் இச்சிகிச்சை நிலையமானது வடமாகாணத்தின் தொற்றுநோய் சிகிச்சை வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.