சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்குத் தொடர் விசாரணை.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்குத்தொடர்விசாரணை
எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு தொடர் விசாரணை இன்றைய தினம்(10) எடுத்துக்கொள்ளப்பட்டது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று நீதிமன்றத்திற்கு சந்திரகாந்தன் உட்பட ஆறு பேரும் அழைத்துவரப்பட்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இவ் வழக்குதொடர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரச தரப்பில் விக்னேஸ்வரன் மாதினியும் சந்திரகாந்தன் தரப்பில் அபுசாலிஉவைஸ் ஆகியோரும் ஆஜராகினர்.
Sathasivam Nirojan |