முல்லைத்தீவு மாவட்ட பயிலுனர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு.
ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட பயிலுனர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நாட்டை கட்டியெழுப்பும் “சுபீட்சத்தின் நோக்கு” எண்ணக்கருவிற்கு அமைய பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கீழ் ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் நியமனங்களை பெற்றுக் கொண்ட 54 பயிலுனர்களுக்கான பயிற்சிகளின் முதற் கட்டமாக பொருத்தமான தொழிலை தேர்வு செய்வதற்கான செயலமர்வு நடைபெற்று வருகிறது.
இக் குறித்த செயலமர்வு பிரதேச செயலர் பிரிவுகளை உள்ளடக்கியதாக மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி நேற்று(10) கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 11பயிலுனர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 09பயிலுனர்கள் மற்றும் ஒட்டிசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 05பயிலுனர்களுமாக 25பேருக்கான செயலமர்வு முல்லைத்தீவு மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள 25 துறைகளில் தமது தகுதி மற்றும் திறமை ஆகியவற்றை கொண்டு தமக்கு பொருத்தமான துறையினை எவ்வாறு தெரிவு செய்தல் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.