இந்தியா சீனா ஆறு மாத எல்லைப் பிரச்சனையை தீர்க்க முடிவு.
ஆறு மாத எல்லைப் பிரச்சனையை
இந்தியா சீனா இணைந்து மூன்று படிகளில் முடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் முக்கிய மோதல் இடங்களில் இருந்து அனைத்து துருப்புகள் மற்றும் ஆயுதங்களை பின்வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கையெழுத்தான ஒரே நாளில் கவச வாகனங்களை பின்வாங்கவும், இருநாடுகளின் கண்காணிப்பில் முக்கிய மோதல் இடங்களில் இருநாட்டு படைகளும் வெளியேறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 6 அன்று நடைபெற்ற எட்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஏப்ரலுக்கு முன்பு இருந்த நிலைக்கு இரு நாட்டு படைகளும் பின்வாங்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.