மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் மரநடுகை.
மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு பூர்த்தியாவதை சிறப்பிக்கும் முகமாக கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் வனவள திணைக்களத்தோடு இணைந்து 100 பயன்தரும் மரக்கன்றுகள் இன்று(11) மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில்
பதில் அரசாங்க அதிபர் S.குணபாலன் அவர்களின் தலைமையில் நாட்டி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், K.S வசந்தகுமார் மற்றும் உதவி மாவட்ட செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் வனவள திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.