கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்குக் கொரோனா!
கிளிநொச்சி, கோணாவில் – யூனியன் குளம் முருகன் கோயிலடியில் வசிக்கும் 47 வயதான நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று (11) கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி கொழும்பிலிருந்து வீடு திரும்பிய அவர், சுகாதாரத்துறையினரால் சுயதனிமைப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில் அவரிடம் மாதிரி பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பில் கட்டட நிர்மாணத்துறையில் பணியாற்றும் அவர் கிளிநொச்சியில் தனிமையில் வசித்து வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னதாக இரண்டு பேருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இவர் மூன்றாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.