போகம்பர சிறைச்சாலையிலுள்ள மேலும் 23 கைதிகளுக்குக் கொரோனாத் தொற்று

போகம்பர சிறைச்சாலையில் மேலும் 23 கைதிகள் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
போகம்பர சிறைச்சாலையில் 23 கைதிகளுக்கும், குருவிட்ட சிறைச்சாலையில் ஒரு கைதிக்கும் இன்று (11) கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி வெலிக்கடை, போகம்பர, மாத்தறை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைகளில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 130ஐத் தாண்டிவிட்டது எனச் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவித்தன.