இலங்கை விமானப்படைச் சிப்பாய்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 08 பேருக்கு தொற்று.

இலங்கை விமானப் படையினரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
தொம்பே மருத்துவமனையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த விமானப்படைச் சிப்பாய்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 08 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படைதெரிவித்துள்ளது.
ஏற்கனவே பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படை எனத் தொற்று ஏற்பட்டநிலையில் தற்போது விமானப்படைக்கும் தொற்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.