ரிஷாத் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு. 25ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு.
ரிஷாத் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு. 25ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு
பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த பிணை மனு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிட்டுள்ளது.
2019இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தி பஸ்கள் மூலம் புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்காளர்களை அழைத்துச் சென்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரிஷாத் பதியுதீன் ஒக்டோபர் 19 ஆம் திகதி தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தன்னைப் பினையில் விடுதலை செய்யுமாறு ஒக்டோபர் 27 ஆம் திகதி மனுவொன்றை ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது.
அதேபோன்று இன்றும் அவரால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதுடன் அந்த மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.