யாழ் விவசாயிகளுக்கு ஐந்தாவது வருடமாகவும் மானிய அடிப்படையில் விதை உருளைக்கிழங்கு வழங்க அங்கஜன் ஏற்பாடு.
யாழ் விவசாயிகளுக்கு ஐந்தாவது வருடமாகவும் மானிய அடிப்படையில் விதை உருளைக்கிழங்கு வழங்க அங்கஜன் எம்.பி ஏற்பாடு
யாழ் மாவட்டத்தில் உருளைக் கிழங்கு செய்கையில் ஈடுபடும் சுமார் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் விதை உருளைக்கிழங்கை வழங்குவதற்க்கு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கரில் உருளைக்கிழங்கு செய்கைக்காக 2 ஆயிரம் விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்கு வழங்க 60 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“சுபீட்சத்தின் நோக்கு” தொனிப்பொருளிள் விவசாயத்தில் முன்னேற்றகரமான பாதையை நோக்கி யாழ் விவசாயிகள் நகர்ந்து செல்ல வழிவகை செய்யும் நோக்கில் இம்முறை உருளைக்கிழங்கு இறக்குமதிக்கு ஜனாதிபதி தடை விதித்துள்ளதால் விவசாயிகள் அதிக இலாபத்தைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 வருடங்களை போன்று இந்த வருடமும் யாழ் விவசாயிகளுகாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களது பரிந்துரைக்கு அமைவாக நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள் , மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாட்டு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சினால் ஒரு விவசாயிக்கு கூடியளவு 4 விதை உருளைகிழங்கு பெட்டி வீதம் வழங்க 7000 விதை உருளைகிழங்கு பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த விதை உருளைக்கிழங்குகள் டிசம்பர் மாதம் முதல் வாரம் அளவில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது