பார வூர்தியில் சென்றுவரும் சாரதி ,உதவியாளர்களுக்கு புதிய சுகாதார நடைமுறைகள்.
யாழ்ப்பாணம் கொழும்பு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கொள்வனவுக்கென பார வூர்தியில் சென்றுவரும் சாரதி மற்றும் உதவியாளர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய சுகாதார
நடைமுறை வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினரால் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று மாலை 3.30 மணிக்கு யாழ் வர்த்தக சங்கத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல் யாழ் வர்த்தக சங்க தலைவர் வ.ஜ.ச ஜெயசேகரம் தலைமையில் இடம்பெற்றது .
இது தொடர்பாக இக் கலந்துரையாடலில் பாரவூர்திகளின் சாரதிகள் மற்றும் அவரது உதவியாளர்களுக்கான புதிய சுகாதார நடைமுறைகள் அறிவிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவித்த வர்த்தக சங்கத்தலைவர் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ் கொழும்பு பாரவூர்தி சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் தங்கள் பிரதேச பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையில் தங்கள் விபரங்களை பதியுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கலந்துரையாடலில் கொழும்பிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள் மற்றும் பாரவூரதி உரிமையாளர்கள் மற்றும் தனியார் பொதி கொள்வனவு செய்வோர் மற்றும் யாழ் மாநகரசபை வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்-