வீடுகளில் பதிவாகும் இறப்புகளுக்கு பி.சி.ஆர் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் பதிவாகும் இறப்புகளுக்கு பி.சி.ஆர் சோதனைகள் நடாத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரேத பரிசோதனை அல்லது ஒரு மாஜிஸ்திரேட் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இறந்தவர்களின் உடல்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்
கொரோனா வைரஸ் காரணமாக அதிக ஆபத்து மற்றும் ஆபத்து இல்லாத பகுதிள் என அடையாளப்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசெலா குணவர்தன தெரிவித்துள்ளார்.