கொரோனா தொற்று முழுமையாக நீங்கவேண்டியும் வழிபாடு இடம்பெற்றது.

தீபாவளியை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் இன்று தீபாவளி தின வழிபாட்டு பூஜைகள் இடம்பெற்றன.
இதன்படி ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தின் பிரதான குருக்கள் எம்.பாலசுப்பிரமணியம் குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.
இதன்போது கொரோனா தொற்று முழுமையாக நீங்கவேண்டியும் வழிபாடு இடம்பெற்றிருந்தது.
பூஜையில் கலந்துகொண்ட பக்தர்கள், சமூக இடைவெளியினை பின்பற்றி கலந்துகொண்டிருந்தனர்.