பொது இடங்களில் கொரோனா விழிப்புணர்வு குறியீட்டு நாடகம்
நாடளாவிய ரீதியில் கொவிட்- 19 தொற்றானது அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து நிலையம் மற்றும், வைத்தியசாலை பொது இடங்களில் கொரோனா விழிப்புணர்வு குறியீட்டு நாடகம்நடைபெற்றது.
குறித்த குறியீட்டு நாடகத்தின் போது பார்வையாளர்களுக்கு முகக்கவசங்கள், கொவிட் – 19 தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் என்பன வழங்கப்பட்டதுடன் பேருந்துகள் மற்றும் கடைகள் பொது இடங்களில் கொவிட் – 19 தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகளும் ஓட்டப்பட்டன.
பேசாலை முவிராசக்கள் பட்டினம் கலைப்பட்டரை கலைஞர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இந் நிகழ்வில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர், ஊடகவியலாளர்கள், மற்றும் மன்னார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.