கிழக்கில் கொரோனாவுக்கு இதுவரை 112 பேர் இலக்கு!

கிழக்கில் கொரோனாவுக்கு
இதுவரை 112 பேர் இலக்கு!
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் இதுவரையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.