தொற்றா நோயால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான அறிவித்தல்!
தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டோருக்கு நோய்கள் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தொற்று நோய் அல்லாத நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் சம்பிக விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார கல்வி பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் அது குறித்து பொது சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்படாது சாதாரணமாக வீட்டில் இருக்கும் நபருக்கு இப்படியான பாதிப்புகள் ஏற்பட்டதால், 1990 நோயாளர் காவு வண்டி சேவையின் ஊடாக வைத்தியசாலையில் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் சுகாதார கல்வி பணியகத்தின் 1999 மற்றும் 011-3422558 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மருத்துவர் சம்பிக விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.