வடபகுதியைச் சேர்ந்த கனடாபிரஜைக்கு கொரோனா தொற்றுஉறுதி.

யாழினை சேர்ந்த கனடாபிரஜைக்கு
கொரோனா தொற்றுஉறுதி
அரியாலையை பூர்வீகமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நபர் ஒருவர் கடந்த ஆண்டு இலங்கைக்கு வந்திருக்கின்றார்.
அவர் அரியாலையில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து , தான் பயணம் செய்வதற்க்கு முச்சக்கரவண்டி ஒன்றை யாழில் பயன்படுத்தியிருக்கின்றார்.
இம் மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்ற நபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை கொழும்பில் உறுதி செய்யப்பட்டுள்ளமையால் அவருடன் பழகிய யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்தவர்ந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறுவடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்
தெரிவித்துள்ளார்.