நல்லூர் கந்தன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூசை வழிபாடு.

யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூசை வழிபாடுகள்.
இன்றிலிருந்து கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாட்டில் தற்போது உள்ள கொரோனா அச்சநிலைமையின் காரணமாக ஆலயங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்குள் பக்தர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை .
எனினும் வழமைபோன்று கந்தசஷ்டி விசேட பூசை வழிபாடுகள் ஆலயத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்ட பூசகர்களுடன் இடம்பெற்றது.