கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை தீ பிடித்ததில் பலர் பலி.

கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழப்பு.
ருமேனியாவின் பியட்டிரா நீம்ட் என்ற வடக்கு 0கிழக்கு பகுதி நகரில் உள்ள மருத்துவமனையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. (அவசர நோயாளர்கள் பிரிவிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது.)
மின்கசிவே இந்த தீ விபத்திற்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் தளத்தில் தீப்பிடித்த வோர்ட்டினில் 8 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
அதற்கு அருகில் காணப்பட்ட அறையிலிருந்த இருவரும் உயிரிழந்துள்ளனர் அனைவரும் கொரோனா வைரசிற்காக சிகிச்சை பெற்றுவந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பலர் செயற்கை சுவாச நிலையிலிருந்தவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளை காப்பாற்ற முயன்ற மருத்துவர் ஒருவர் கடும் காயங்கள் காரணமாக உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் காயங்களுக்குள்ளான மருத்துவர் இராணுவ ஹெலிக்கொப்டர் மூலம் தலைநகர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார், வேறுபல மருத்துவ பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.