மகாஜனக் கல்லூரி மாணவி ஜனுஸ்கா வடக்கில் முதலிடம் : தேசிய ரீதியில் இரண்டாமிடம்
ஜனுஸ்கா வடக்கில் முதலிடம்
2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகள் பெற்று வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.தமிழ்மொழி மூலமான பரீட்சார்த்திகளில் புத்தளம் ஸாஹிரா கல்லூரி மாணவி முகமட் அல்சாத் அதீபாத் ஷைனா 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா அகில இலங்கை ரீதியில் இரண்டாவது நிலையைப் பெற்றுள்ளார்.
பொஸ்கோ, யாழ்.இந்துவில்
அதிக மாணவர்கள் சித்தி
இதேவேளை, வடக்கில் யாழ்.மாவட்டத்தில் வழமைபோல் இம்முறையும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் புனித பொஸ்கோ ஆரம்பப் பாடசாலை மற்றும் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றில் அதிக மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டி சித்தி பெற்றுள்ளனர்.
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் 232 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். 149 பேர் சித்தியடைந்துள்ளனர். புனித பொஸ்கோ ஆரம்பப் பாடசாலையில் கூடிய எண்ணிக்கையான மாணவர்கள் தோற்றினர். 159 பேர் சித்தியடைந்துள்ளனர்.
மேற்படி இரு பாடசாலைகளிலும் ஒவ்வொரு மாணவர்கள் 195 புள்ளிகள் பெற்று முன்னிலை அடைந்துள்ளனர்.