இலங்கையில் 24 நாட்களில் 45 பேர் கொரோனாவால் பலி.

இலங்கையில் 24 நாட்களில்
45 பேர் கொரோனாவால் பலி
கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் கடந்த 24 நாட்களில் மாத்திரம் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் 22 வரையான சுமார் 8 மாத காலப்பகுதியில் கொரோனாவால் 13 பேரே உயிரிழந்திருந்தனர். ஒக்டோபர் 31ஆம் திகதியாகும்போது மரண எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.
எனினும், கடந்துள்ள 15 நாட்களில் மாத்திரம் 33 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 90 வீதமானோர் 60 வயதைக் கடந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இலங்கையில் கொரோனாவின் 3ஆவது அலைமூலம் நேற்று வரை 13 ஆயிரத்து 788 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அதற்கமைய இலங்கையில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.