டயனா கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டார் : ஐக்கிய மக்கள் சக்தி
இருபதாம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கையொப்பத்துடன் டயனா கமகேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆம் திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்க கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிராக டயனா கமகே செயற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு செயற்பட்டதன் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
அதன் காரணமாகவே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற வகையில் கட்சி தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்திற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.