20 யை ஆதரித்த 2 உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சி வரிசையில் ஆசனம்
இருபதாம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்தகுமார் மற்றும் டயனா கமகே ஆகியோருக்கு ஆளும் கட்சி வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கு அமையவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
எனினும் இருபதை ஆதரித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய 6 உறுப்பினர்களுக்கு எதிர்க் கட்சி வரிசையிலேயே ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்க் கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல அண்மையில் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் தமது கட்சியில் இருந்து கொண்டு கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சி வரிசையின் ஆசன ஒதுக்கீடு செய்யுமாறு கோரியிருந்தார்.
இருபதாம் திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் அதற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் 9 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
1. டயனா கமகே
2. அரவிந்தகுமார்.
3. ஐ.ரஹ்மான்
4. பாசிசல் காசீம்
5. எச்.எம்.எம்.ஹரீஸ்
6. எம்.எஸ்.தௌவுபிக்
7. நஸீர் ஹகமட்
8. ஏ.ஏ.எஸ்.எம்.ரஹீம்
9. எம்.எம்.எம்.முசாரப் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருபதாம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடதக்கது.